தூத்துக்குடி அரசு மருத்துவமனை தோள்கொடுதோழா அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை தோள்கொடுதோழா அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனைதோள்கொடுதோழா அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் இரத்ததான முகாம் இரத்த வங்கியில் வைத்து நடைபெற்றது.

இந்த இரத்ததான முகாமிற்கு சமூக ஆர்வலர் ஜெயபால், வி கேன் டிரஸ்ட் நிறுவனர் ஸ்ரீனிவாசன்,தூத்துக்குடி பல்கலைக்கழக வ உ சி பொறியியல் கல்லூரி முனைவர் ரா.அ.மலைராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார். 

சமூக ஆர்வலர் ஜெயபால் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்.இரத்த தான விழிப்புணர்வை பற்றி முனைவர் ரா.அ.மலைராஜன் உரையாற்றினார்.

இந்த இரத்த தான முகாமில் தோள்கொடுதோழா உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என நூற்றிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தோள் கொடு தோழா அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.