ஸ்டெர்லைட் ஆலை மூடக்கூடாது என போராடியது பாஜகவும் அதிமுகவும், ஆனால் ஆலையை முடியாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேச்சு.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (03/04/2024) தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறுக்குச்சாலை பகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்த தேர்தல் என்பது மிக முக்கியமான ஒரு தேர்தல் இந்த நம்முடைய உரிமைகளை மீட்க மற்றும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். எப்படி நீட் பரிச்சை கொண்டு வந்து மருத்துவம் சேராமல் தடுத்தார்களோ, அதே போல் புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்து கல்லூரியில் சேரும்போது அதில் ஒரு நுழைவுத் தேர்வு வைக்கப்படும்.
நம்முடைய முதலமைச்சர், பெண் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கப் போகும்போது புதுமைப்பெண் திட்டம். அதே போல் இளைஞர்கள் கல்லூரி படிக்க வேண்டும் என அவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் வழியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறது. விவசாயிகள் உரிமைகள், பெண்கள் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் நாம் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், இந்தியா கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்.
இங்குப் பல பத்திரிக்கையாளர்கள் வந்துள்ளனர், பாஜக ஊடகத்தினரை எப்படி மிரட்டி வைத்துள்ளனர் என்றால் பாஜக, மோடியும் பற்றி எழுதக்கூடாது. அதையும் மீறி நாங்கள் உண்மையாக தான் எழுதுவோம் என்று எழுதிய பத்திரிகையாளர்கள் ஊடகத்தினரை கைது செய்துள்ளனர், கொலை செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷை கொலை செய்துள்ளது பாஜக.
டெல்லியில் விவசாயிகள் போராடிய பொழுது ஒரு அமைச்சரின் மகன் அவர்கள் மீது கார் ஏற்றி நான்கு விவசாயிகளை கொலை செய்தார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 13 பேரைச் சுட்டுக்கொன்றது அதிமுக ஆட்சி. பாஜகவும் அதிமுகவும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கூடாது என்று போராடியது, நாம் முதலமைச்சர் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று வாக்குறுதி அளித்தது போல ஸ்டெர்லைட் ஆலையை மூடினார். இதனால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்றெல்லாம் கூறினீர்கள், இல்லை அதற்கு மாறாக உலகிலேயே மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலையான வின்பாஸ்ட் அலையைத் தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது, அதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் வேலையில் முன்னுரிமை என்ற வாக்குறுதியும் நம் முதலமைச்சர் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் டைட்டில் பார்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய பகுதிகளிலும் டைட்டில் பார்க் அமைக்கப்பட உள்ளது.
கலைஞர் உரிமை தொகை ஒரு கோடி 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு விடுபட்டவர்களுக்கு முகாம் அமைத்து வழங்கப்படும். நாம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை அமைத்தவுடன், சமையல் எரிவாயுவின் விலை 500 ஆகக் குறைக்கப்படும். 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் கொண்டு வந்து கலைஞர். நாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது ஒரு ரூபாய் கூட நிதியாக ஒன்றிய அரசு வழங்கவில்லை, நம் முதலமைச்சர் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 நிதியாகவும், பழுதடைந்த வீடுகளுக்கு 1.5 லட்சம் நீதியாகவும் வழங்கினார்.
இந்தியாவில் இரண்டு முதலமைச்சர்கள் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது, ஒரு துணை முதலமைச்சர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார், தற்பொழுது தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
குறுக்குச்சாலை பகுதியில் புதிய பாலம் கட்டி தரப்படும். நாடாளுமன்ற சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 30 லட்சத்தில் சமுதாய நலக்கூடம். பறை பயிற்சி அளிக்கப்பட்டு நெய்தல் திருவிழாவில் பங்கேற்றனர்.
33 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 500 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம். விரைவாக நடைபெற்று வருகிறது. விரிவாக முடிக்கப்பட்டு அத்தனை கிராமங்களும் பயன்பெறும் வகையில் அந்த திட்டமும் உங்களுக்கு சமர்க்கப்படும் என்பது மகிழ்வோடு தேர்ச்சி கொள்கிறேன்.
டெல்லியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். இந்தியா கூட்டணி வேட்பாளராக உங்களுடைய வேட்பாளராக நிறுத்தப்பட்ட கூடிய எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடி எனது இரண்டாவது தாய் வீடு, உங்களுடைய அன்பை நான் பெற்று இருக்கிறேன், அந்த உரிமையோடு எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி வாய்ப்பு தர வேண்டும்.