தமிழர் திருநாளில் கழக கொடியேற்றி...

தமிழர் திருநாளில் கழக கொடியேற்றி...

தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு,புதூர் கிழக்கு ஒன்றியம்,

இராமச்சந்திராபுரம் கிராமத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கழக கொடியேற்றி கிராம பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.

மேலும்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட கலையரங்கத்தினை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய,பேரூர் கழகச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை கழகச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், அணி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.