தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் எட்டயபுரம் சாலை முதல் வடக்கு சோட்டையன் தோப்பு பகுதி வரை சுமார் 2. 20 கிலோமீட்டர் தூரத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 31 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட உள்ளது இந்த சாலை அமைக்கும் பணிகளை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் தொடர்ந்து கோமஸ்புரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்க5.50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளையும் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் டிடிசி ராஜேந்திரன்,தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பு செயலாளர் ரெங்கசாமி வசந்தா, வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா தங்க மாரியப்பன் இளைஞரணி வேல்முருகன் எம்எல்ஏ உதவியாளர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.