தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றவும் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த ஜஸ்டின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க கோரியும் ஆட்சியரிடம் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை மனு.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கோரிக்கை மனு வழங்கினார்.
அந்த கோரிக்கை மனுவில் ஸ்டெர்லைட் ஆலையால் மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பையும் ஆலையை மூடியதால் மழையும் , காற்றும் தூய்மையாக இருப்பதை கூறியதோடு உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மண்ணைவிட்டு நிரந்தரமாக அகற்ற ஆணை பெறவேண்டும் எனவும் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது உயிரிழந்த ஜஸ்டின் குடும்பத்தாருக்கு அரசு பணி வழங்க கோரியும் ஆட்சியரிடம் மனு அளித்தார் .
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் தெரிவித்தார்.