மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தியவர்களை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் காட்டம்.

இந்திய நாட்டின் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி 100க்கும் மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து ஊர்வலமாக அழைத்து செல்லும் செயல் மனித கொடுமையின் உச்சமாகும் அச்செயலில் ஈடுபட்ட கொடூர அரக்கர்களை நடு ரோட்டில் தூக்கில் இட வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது அதை தடுத்து நிறுத்த முடியாத கையாளாகத மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்து ராணுவ கட்டுபாட்டில் கொண்டு வரவேண்டும் .இதனை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கலைத்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் நலன் அமைப்பின் அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.