தூத்துக்குடி அல்லிகுளம் கிராமத்தில் தனிநபர் இடத்தை அரசுக்கு சொந்தமாக்க முயற்சிக்கும் வட்டாட்சியர் - அருணா தேவி ரமேஷ் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு!.

தூத்துக்குடி அல்லிகுளம் கிராமத்தில் தனிநபர் இடத்தை அரசுக்கு சொந்தமாக்க  முயற்சிக்கும் வட்டாட்சியர் - அருணா தேவி ரமேஷ் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு!.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ; தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அல்லிக்குளம் கிராமத்தில் கனகராஜ் என்பவருக்கு பூர்வீகமாக பாத்தியப்பட்ட 1 1/2 ஏக்கர் இடம் இருந்துள்ளது.

தூத்துக்குடி திருநெல்வேலி ஒருங்கிணைந்த சிதம்பரனார் மாவட்டமாக இருக்கும்போது அந்த இடத்தில் 50 செண்ட் இடத்தை கனகராஜுன் தந்தையும்,தாயும், இணைந்து அரசுக்கு தானமாக கொடுத்துள்ளனர். 

மீதமுள்ள ஒரு ஏக்கர் இடத்தை கனகராஜ் ஆண்டு அனுபவித்து குடியிருந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி வட்டச்சியார் பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கனகராஜ்-யிடம் மீதமுள்ள ஒரு ஏக்கர் இடத்தையும் அரசுக்கு சொந்தமான இடம் என்று மிரட்டியதாகவும் அதனை தொடர்ந்து கனகராஜ் தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் அந்த வழக்கானது OS NO: 30/2023 நிலுவையில் இருந்து வருகிறது. 

வழக்கு நிலுவையில் இருந்த போதிலும் வட்டாட்சியர் பிரபாகரன் தனக்கும் நீதிபதிகாண அதிகாரம் இருக்கிறது நானும் நீதிபதி தான் நான் நினைத்தால் உனது வீட்டை இடித்து தரமட்டமாக்கி விடுவேன் என்று மிரட்டுவதாகவும் சாதி ரீதியாகவும் கீழ்தரமாக பேசுவதாகவும் கனகராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் . 

எனவே அவர் மீது Sc/st ஆணையம், மனித உரிமை ஆணையம், தமிழக முதல்வர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் வட்டாட்சியர் நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை மனு கொடுக்க வரும் மக்களையும் மதிப்பதில்லை.இதேபோக்கு நீடிக்குமானால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படுவதோடு ,தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிடவும் நேரிடும் என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் மற்றும் ஐஜேகே தென் மாநில இணைச்செயலாளர்அருணா தேவி ரமேஷ்பாண்டியன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.