தூத்துக்குடியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (01.10.2024) காலை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத், தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி பகுதிகளில் உள்ள 403 ஊராட்சி மன்றத்திற்கு 487 விளையாட்டு உபகரண தொகுப்புகளை ஊராட்சி மன்ற தலைவரிடம் அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் மதுபாலன் கூடுதல் ஆட்சியர் ஜஸ்வர்யா துணை மேயர் ஜெனிட்டா மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம் திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் மண்டல தலைவகள் நிர்மல் ராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி மாமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர் சுரேஷ் குமார் ராமகிருஷ்ணன் சரண்யா ராஜ் குமார் ஜான்சி ராணி, கீதா முருகேசன்,அந்தோணி பிரகாஷ் மார்சலின்,ஜாக்குலின் ஜெயா, ஜெயசீலி, பவானி, வைதேகி, நாகேஸ்வரி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.