அப்போலோ கிளினிக் சென்டர் தூத்துக்குடியில் லட்சுமி பாலி கிளினிக்கில் புதிதாக தொடக்கம் - அப்போலோ நீலக்கண்ணன் லட்சுமி பாலி கிளினிக் மாரிமுத்து கூட்டாக அறிவிப்பு.

அப்போலோ கிளினிக் சென்டர்  தூத்துக்குடியில் லட்சுமி பாலி கிளினிக்கில் புதிதாக தொடக்கம் - அப்போலோ நீலக்கண்ணன்   லட்சுமி பாலி கிளினிக் மாரிமுத்து கூட்டாக அறிவிப்பு.

இன்று தூத்துக்குடியில் உள்ள லட்சுமி பாலி கிளினிக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மதுரை அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன் மற்றும் லட்சுமி பாலி கிளினிக் , நிறுவனர் மற்றும் எலும்பியல் துறை நிபுணர் டாக்டர் மாரிமுத்து மற்றும் டாக்டர் கேவின் ஜோசப் , நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் கூட்டாக சந்தித்து தெரிவித்ததாவது.  

தூத்துக்குடி 14 ஜூலை : அப்போலோ மருத்துவமனை மதுரை மற்றும் தூத்துக்குடியில் உள்ள லட்சுமி பாலி கிளினிக்யுடன் இணைந்து ஜுலை 14/07/23 இன்று "அப்போலோ கிளினிக்கல் சென்டர் ” என்கின்ற ஸ்பெஷாலிட்டி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. 

200 மில்லியன் மக்களுக்கு தங்கள் சேவையை தொடர்கிற அப்போலோ குரூப் நிறுவனம் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் முதல் படியாக இந்த ஸ்பெஷாலிட்டி கிளினிக்கை தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது , இதற்கு முக்கிய காரணம் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உயர் மற்றும் சிறப்பு மருத்துவ சேவை குறைவாக காணப்பட்ட நிலையை கருத்தில் கொண்டு. இத்தகைய நிலையை மாற்றும் முயற்சியாகவும் தரமான சேவையை வழங்கும் நோக்கத்துடன் தொடக்கப்பட்டுள்ளது இந்த சென்டரில் முதல் கட்டமாக கார்டியாலஜி,நியூராலஜி, . ஆண்காலேஜி,மற்றும் ஆர்த்தோ ஸ்பெஷாலிட்டி,சிகிச்சைகளுக்கு கன்சல்டேஷன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் ஜி ஜெயலட்சுமி , மார்க்கெட்டிங் மண்டல மேலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.