தூத்துக்குடி கலைஞரின் முரட்டு பக்தன் அண்ணாச்சி என். பெரியசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு All CAN TRUST சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி கலைஞரின் முரட்டு பக்தன் அண்ணாச்சி என். பெரியசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு All CAN TRUST சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏவுமான கலைஞரின் முரட்டு பக்தன் அண்ணாச்சி என். பெரியசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் மரம் நடு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மரம் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆல் கேன் டிரஸ்டின் தலைவர் மோகன்தாஸ் சாமுவேல்,சுதன், நாராயணன், ஆசீர், வட்டச் செயலாளர் ரவீந்திரன், முக்கையா, ஆல் கேன் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் மருதபெருமாள், மகேஸ்வரன் சிங், செந்தில், ஜெயம் பாண்டி,சிவசுந்தர், பேச்சிமுத்து, விக்னேஷ், ராஜன், பிரைட் அன்ன ராஜ், வேல்பாண்டி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.