அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் -அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு வார்த்தையில் உடன்பாடு போராட்டம் வாபஸ்!.

அங்கன்வாடி பணியாளர்கள்  போராட்டம் -அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு வார்த்தையில் உடன்பாடு போராட்டம் வாபஸ்!.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் சட்ட மன்ற அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை அங்கன்வாடி பணியாளர்கள் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

அங்கன்வாடி பணியாளர் மாநில நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அங்கன்வாடி பணியாளர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே தமிழக அரசின் பரிசீலனையில் உள்ள கோரிக்கைகள் தான், தமிழக முதல்வர் உத்தரவின் படி இன்று அங்கன்வாடி பணியாளர்கள் மாநில நிர்வாகிகள் உடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல பட்டு படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். 

பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோல் அவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனையில் இருப்பதாகவும், உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும். என்றும் அதுவரை அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது உடலை வருத்திக் கொண்டு காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும், போராட்டத்தையும், நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அங்கன்வாடி பணியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தையும் கூடிய விரைவில் நிறைவேற்றி தரும் என்றும் உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

பேட்டியின் போது அங்கன்வாடி பணியாளர்கள் மாநில நிர்வாகிகள் டெய்சி, கண்ணன், ரத்தின மாலா, கேம பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்