தூத்துக்குடி கால்டுவெல் காலனி நிஷா பவுண்டேஷன் மது போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் "உலக போதை ஒழிப்பு தினத்தை" முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி கால்டுவெல் காலனி நிஷா பவுண்டேஷன் மது போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் "உலக போதை ஒழிப்பு தினத்தை" முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நிஷா பவுண்டேஷன் மேனேஜிங் டைரக்டர் முகமது ஷாநவாஸ் முன்னிலை வகித்தார், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட், எம்.எஸ்.டபுள்யு, திட்ட இயக்குனர் தனிஷா ஷாநவாஸ் விழா வரவேற்புரை ஆற்றினர், தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில் இளந்திரையன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் போதை மீட்பு குறித்த விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார். 

முன்னதாக உலக போதை எதிர்ப்பு தின உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இராஜசேகர் மற்றும் மனநல ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிஷா பவுண்டேஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.