தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி)யால் திரவியபுரம்,மறவன்மடத்தில் தூய்மையான குடிநீர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி)யால் திரவியபுரம்,மறவன்மடத்தில் தூய்மையான குடிநீர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய மரியன்னை கல்லூரியின்உன்னத் பாரத் அபியான் சமூக மேம்பாட்டு திட்டம் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட குறைந்த செலவின பணிகளுக்கு கீழ்  28.02.2024 அன்று கல்லூரியின் பொருளாதாரத் துறை  சார்பாக காலை சரியாக 11மணியளவில் கல்லூரி மாணவிகளால் திரவியபுரம்,மறவன்மடம் பஞ்சாயத்து, தூத்துக்குடியில் கிராமத்து மக்கள் மற்றும் R.C. தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சுத்தமான குடிநீர் குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

சுத்தமான குடிநீர் உபயோகப்படுத்துவது நோய்கள் மற்றும் உடல் உஷ்ணத்தையும் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. குடிநீர் சேகரிக்கும் பாத்திரங்கள் தூய்மையாக இருப்பது, நீரை வீணாக்காமை,சரியான விகிதத்தில் மற்றும் போதுமான அளவு குடிப்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு கொடுக்கப்பட்டது. 

மதிய உணவு வேளையில் பள்ளி மாணவ மாணவிகளிடம் தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதால் ஆரோக்கியமாவதுடன், நோய்களை தடுத்து பள்ளி வருகை நாளை அதிகப்படுத்தலாம் போன்றவை குறித்து பேசப்பட்டது. கிராம மக்கள் மற்றும் 62 பள்ளி மாணவ மாணவிகள் பயனடைந்தனர்.

இந்நிகழ்வுகளில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை. மரியதாஸ், மறவன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் அ.லில்லிமலர், துணை தலைவர் ந.பொன்வேல், மன்ற செயலர் து. சத்தியராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 5 மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கல்லூரி செயலர் அருட் சகோதரி. முனைவர். ஷிபானா,     கல்லூரி  முதல்வர். அருட்சகோதரி. முனைவர். ஜெஸ்ஸி பெர்னாண்டோ     துணை முதல்வர் மற்றும் உன்னத் பாரத் அபியான், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட குறைந்த செலவின பணிகளுக்கான கல்லூரி ஒருங்கிணைப்பாளர் அருட் சகோதரி. முனைவர். குழந்தை தெரஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது

இந்நிகழ்வுகளுக்கான  ஏற்பாடுகளை தூய மரியன்னை கல்லூரி இரண்டாமாண்டு பொருளாதாரத் துறை மாணவிகள் ஜஸ்வர்யா,பெர்லின், ஸ்நோ நிதிதா, ரிஸ்வானா அசிம், சுப்பிரியா மற்றும் உன்னத் பாரத் 

அபியான் சமூக மேம்பாட்டு திட்டத்தின்பொறுப்பாளர் பேராசிரியர். முனைவர். டெ. ரதி மற்றும் துறை தலைவர். முனைவர். அமுதா ஆகியோரும் சிறப்புர செய்தனர்.