அமலிநகர் மீனவர் போராட்டம் 9 மீ னவ கிராம மக்கள் ஆதரவு 3500 படகுகள் கடலுக்கு செல்லாமல் புறக்கணிப்பு.
திருச்செந்தூர் அமலிநகர் ஜீவா நகரில் தூண்டில் பாலம் அமைக்கக்கோரி மீனவர்கள் மூன்றுநாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் கடலுக்கு தொழில் செய்ய செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர். மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக புன்னக்காயல், சிங்கித் துறை கொம்புத்துறை, வீரபாண்டியபட்டிணம், ஜீவா நகர், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை ஆகிய ஒன்பது மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் புறக்கணித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் சுமார் 3500 க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு, பைப்பர் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை தூண்டில் பாலம் உடனடியாக அமைக்கக்கோரி முதற்கட்டமாக அமலிநகர் மீவை மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இது போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அமலிநகர் ஊர் கமிட்டியினர் தெரிவித்தனர்.