அரசியல் ஆதாயத்திற்காக காமராஜ் கல்லூரியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கும் அமைப்பிற்கு அனைத்து நாடார் சமுதாய சங்கங்கள் கண்டனம்.

அரசியல் ஆதாயத்திற்காக  காமராஜ் கல்லூரியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கும் அமைப்பிற்கு அனைத்து நாடார் சமுதாய சங்கங்கள் கண்டனம்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள காமராஜ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்த மாணவர் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு இருப்பது குறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பத்திரிக்கையாளரிடம் நிர்வாகி விநாயகமூர்த்தி (செயலாளர்) கூறியது;

தூத்துக்குடி மாநகரில் பெரும்பான்மையாக நாடார் சமூகத்தினரே வணிகத்தொழில் நடத்தி வந்துள்ளனர்.

எங்களது சங்கம் 1919ம் ஆண்டு இந்து நாடார் சமுதாயப் பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 100 ஆண்டுகளை கடந்து கல்விப்பணி செய்து வருகிறது.

1956 ஆம் ஆண்டு காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது.1959-ஆம் ஆண்டு காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. 1921-ம் ஆண்டு நாடார் சமுதாயப் பெரியோர்களால் (TMB) நாடார் வங்கி தொடங்கப்பட்டது. மற்றும் 1966-ம் ஆண்டில் தூத்துக்குடியில் வாழும் பிற ஊர் நாடார் சமுதாயப் பெரியோர்களால் தூத்துக்குடி கல்விக்குழு உருவாக்கப்பட்டது.

காமராஜ் கல்லூரி, காமராஜ் மகளிர் கல்லூரி மற்றும் காமராஜ் பள்ளி சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு சுமார் 5000 மாணவர்கள் இன்றைய தேதியில் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரிக்கு தமிழக அரசால் A+ அங்கிகாரம் தரக்குறியீடு மற்றும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எங்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கியதற்காக கல்வி கட்டணம் அரசு நிர்ணயத்தை விட அதிகமாக வசூலிப்பதாக அவர்கள் பொய் போராட்டங்கள் செய்து எங்களது கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்.

அந்த மாணவன் நீக்கப்பட்டதற்கான காரணம் அவர் 2020 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு முடித்து 2022 ஆம் ஆண்டு எங்களது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்தார் அவர் முதலாம் ஆண்டு கல்லூரியில் பயிலும் பொழுது ஒழுக்கமின்மை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டும் அதேபோன்று இரண்டாம் ஆண்டு தொடர்ந்து அதை செயலை செய்ததன் காரணமாகவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் மீண்டும் கல்லூரியில் அந்த மாணவரை கல்லூரியில் சேர்த்துக் கொண்டதன் படி தற்போது இறுதியாண்டு பயின்று வரும் அந்த மாணவர் கல்லூரியின் நிர்வாகிகளையும் கல்லூரி ஆசிரியர்களையும் அடிக்க முற்பட்டும் மிரட்டும் தோனியில் ஈடுபட்டதான் காரணமாகவே அவரை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 

இந்த நீக்கத்தை திசை திருப்பும் வகையில் கல்லூரியில் பயிலும் மாணவர்களை மூளை சலவை செய்து எங்களது கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்வித் தொகையை விட அதிகமாக பணம் வசூலிப்பதாக கூறி மாணவ அமைப்புகளை வைத்து போலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

எனவே அரசியல் ஆதாய நோக்கம் கொண்ட சிலர் தங்களுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் வண்ணம் கல்லூரியில் பயிலும் மாணவர்களை மூளைச்சலவை செய்து கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசியல் ஆதாயம் கொண்ட அமைப்புகள் கல்லூரியின் வளர்ச்சியை தடுக்கும் வண்ணம் செயல்பட்டு தங்களுக்கு உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்ற சுயலாபத்திற்காக கல்லூரிக்கு இடைஞ்சல்கள் ஏற்படுத்திவருவதை எங்களது தூத்துக்குடி சுற்று வட்டார அனைத்து நாடார் சமுதாய சங்கங்கள் வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.