வீரபாண்டிய பட்டிணம் அகில இந்திய மனித உரிமை கவுன்சில் தூத்துக்குடி மாவட்ட தலைவருக்கு சமூகசேவகர் கெளரவ டாக்டர் பட்டம் ஜெம் பல்கலைகழகம் வழங்கி கெளரவிப்பு!.
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டிணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் சிறந்த சமூக சேவகருமான என் .சுரேஷ் அகில இந்திய மனித உரிமைகள் கவுன்சில் அமைப்பில் தூத்துக்குடி மாவட்டத் தலைவராக உள்ளார்.
இவர் சமூக ஆர்வலராக பணி செய்து வருகிறார் இவரின் அரிய பணியினை கருத்தில் கொண்டு ஜெம் பல்கலைகழகம் சிறந்த சமூகசேவகர் என்ற கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்து உள்ளது.
இதற்கான விழா ஈரோடு தனியார் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள சுரேஷ் அகில இந்திய மனித உரிமைகள் கவுன்சில் அமைப்பில் தூத்துக்குடி மாவட்டத் தலைவராக பொறுப்பு வசித்து வருகிறார். மேலும் கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சுரேஷை அகில இந்திய மனித உரிமைகள் கவுன்சில் மாநில செயல்தலைவர் பிண்டோ, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஹரிஹரன் என்ற அய்யப்பன் பெருளாளர் சங்கரநாராயண அய்யர், துணைச் செயலாளர் ஜான்சிங்கராயன், துணைத்தலைவர்கள் சாமுவேல்ராஜ், திருமலைச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் மாரியப்பன், ஒன்றிய தலைவர் மாரி, செயலாளர் இசக்கிமுத்து, நகரச் செயலாளர் தங்கமாரி மற்றும் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.