அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தூத்துக்குடி தெற்கு மாவட்ட 19 வது பிரதிநிதிகள் மாநாடு ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தூத்துக்குடி தெற்கு மாவட்ட 19 வது பிரதிநிதிகள் மாநாடு ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தூத்துக்குடி தெற்கு மாவட்ட 19 வது பிரதிநிதிகள் மாநாடு ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து நடைபெற்றது இந்த மாநாட்டில் மாநில தலைவர் முகவை முத்துராமலிங்கம் மற்றும் மாநில பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் பங்கேற்று மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர் 

கட்சியின் வளர்ச்சிப் பணி எதிர்கால சட்ட திட்ட நடவடிக்கைகள் மக்கள் பணி ஆகியவற்றை குறித்து மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் ஆலோசனை வழங்கி உரையாற்றினார்.

தூத்துக்குடி மாவட்ட தொழிற் சங்க செயளாளர் ராமகிருஷ்ணன் கட்சியின் செயல்பாடு மற்றும் பிப்ரவரி 12 தேதி நடக்கும் மாநில மாநாடுக்கு நெல்லை,தூத்துக்குடி, மாவட்டங்களின் சார்பாக மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீனவ  சுரேஷ் தேவர் தலைமையில் 100 வாகனங்களில் மாநாடுக்கு செல்லுவதை பற்றி உரையாற்றினார்.மாவட்ட நிர்வாகிகளும் இந்த கருத்தை வரவேற்றனர்.

இந்த மாநாட்டில் மாவட்ட தலைவராக சிவராம் கார்த்திக்,மாவட்ட செயலாளராக கால்வாய் முத்துராமலிங்கம்,மற்றும் துணை செயலாளார் வழக்கறிஞர் உடையார் பாண்டியன், பொருளாளர் துரைசரவணன், மாவட்ட துனண தலைவர் ரமேஷ் பாண்டியன்,ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய மாவட்ட,ஓன்றிய,நகர மற்றும் கிளை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நடைபெற்ற மாநாட்டை தூத்துக்குடி தெற்குமாவட்ட  நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் .

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்ந்தமாவட்ட  நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் துரைசரவணன் நன்றியுரையாற்றினார்.