"குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லம்"-எஸ் பி பாலாஜி சரவணன் ஆயர் ஸ்டீபன் அந்தோனி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

"குடிபோதை நோய் மறுவாழ்வு இல்லம்"-எஸ் பி பாலாஜி சரவணன் ஆயர் ஸ்டீபன் அந்தோனி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

தூத்துக்குடி மறை மாவட்ட நூற்றாண்டு திட்டம் (1923-2023) இறையடியார் சூசை நாதர் குடிபோதை நோய் மறுவாழ்வு புதிய இல்லம் அடிக்கல் நாட்டு விழா 19/03/23 இன்று தூத்துக்குடி செல்சீனி காலனி 6 வது தெருவில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மதுரை மாவட்ட முன்னாள் ஆயர் இவோ அம்ப்ரோஸ், பெங்களூர் செபமாலைதாசர் சபைஉயர் ஜஸ்டின் ராஜ்,(தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்தனர்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு சிவசுப்பு,தூத்துக்குடி நகர கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சம்பத்குமார் (பொறுப்பு) 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வைதேகி, மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு, மறை மாவட்ட நூற்றாண்டு குழுக்கள் ஒருங்கிணைப்பாளர், மறைமாவட்ட முதன்மை குருக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மறை மாவட்ட பல்நோக்கு சமூக சேவை சங்கங்கள், மறை மாவட்ட இளையோர் அமைப்புகள், மறை மாவட்ட பக்த சபைகள், மறை மாவட்ட வின்சென்ட் தே பவுல் சபையினர், மறை மாவட்ட மரியாயின்  சேனையினர், சமூக நல இயக்கங்கள், ஏ ஏ ஆல் கால் அனானிமஸ் தோழர்கள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியினை மறை மாவட்ட நூற்றாண்டு குழுவினரோடு இணைந்து தூத்துக்குடி மதுரை மாவட்ட பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணி குழு சிறப்பாக செய்திருந்தது.

.