கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ரெடீமர்ஸ் கிளப் நடத்தும் மாரத்தான் போட்டிகள் நடைபெறுகிறது.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் ரெடீமர்ஸ் கிளப் சார்பில்நாலுமாவடி ஏலீம் விளையாட்டு மைதானத்தில் டிச. 29 ஆம்தேதி காலை 6 மணி அளவில் கல்லூரி மாணவர்களுக்கு 17 கி.மீ. தூரமும், பள்ளி மாணவர்களுக்கு 10 கி.மீ. தூரமும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும் மாரத்தான் போட்டிகள் நடைபெறுகி றது.மாரத்தான் போட்டியை நிறைவு செய்யும் முதல் 25 போட்டியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. கல்லூரி மற்றும் பள்ளி பெண்கள் நிறைவு செய்யும் அனைவருக்கும் பரிசுகள்வழங்கப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக் கான போட்டியில் முதல் இடத்தைப் பிடிக்கும் மாணவருக்கு 10 ஆயிரமும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் மாணவருக்கு 8 ஆயிரமும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் மாண வருக்கு 6 ஆயிரமும், பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் முதல் இடத்தைப்பிடிக்கும் மாணவருக்கு 8 ஆயிரமும், இரண்டாவது இடத்தைபிடிக்கும் மாணவருக்கு 6 ஆயிரமும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் மாணவருக்கு 4 ஆயிரமும்,
கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கான போட்டியில் முதல் இடத்தைப் பிடிக்கும் மாணவிக்கு 6 ஆயிரமும், இரண்டாவது இடத்தைபிடிக்கும் மாணவிக்கு 4 ஆயிர மும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் மாணவிக்கு 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டு,பள்ளி, கல்லூரி அடையாள அட்டை அவசியம்தேவை. பங்கு பெறுகின்ற அனைவருக்கும் காலை உணவு, டிசர்ட், சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்ள முந்தின நாள் (28.12.2023) வருகை தரும் மாணவ, மாணவிகளுக்கு இரவு தங்கு வதற்கு தனித்தனி இட வசதி உண்டு.
முன் பதிவுக்கான கடைசி நாள் டிச. 23 ம் தேதி. கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் 96007 92709, 99440 27306. அனுமதி இலவசம். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.