அதிமுக கூட்டணியில் பிஜேபி இல்லை என அதிமுக தலைமை கழகம் அறிவித்ததை தொடர்ந்து தூத்துக்குடி அதிமுகவினர் கோலாகல கொண்டாட்டம்.

அதிமுக கூட்டணியில் பிஜேபி இல்லை என அதிமுக தலைமை கழகம் அறிவித்ததை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வான வேடிக்கை: இரவை பகலாக்கும் வகையில் சுமார் அரை மணி நேரம் வான வேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்.
அதிமுக கூட்டணியில் பி.ஜே.பி இல்லை என அதிமுக தலைமை கழகம் அறிவித்ததை தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தலைமையில் அதிமுகவினர் அதிமுக கூட்டணியில் பிஜேபி இல்லை என தலைமை அறிவித்ததை கொண்டாடும் வகையில் தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி முன்பு இரவை பகலாக்கும் வகையில் சுமார் அரை மணி நேரம் வான வேடிக்கை முழங்க, பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் 39 வது வார்டு வட்டச் செயலாளர் திருச்சிற்றம்பலம் மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டைகர் சிவா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், பகுதிகழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர், உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.