தூத்துக்குடி மாநகர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை- அமைச்சர் கீதாஜீவன் பெற்றார்.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகளிலும் மக்கள் குறைகளை கேட்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் குறைதீர்க்கும் முகாம்களை நடத்தி வருகிறார் அந்த வகையில் இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது மகிழ்ச்சிபுரம் பிள்ளையார் கோவில் அருகில் வைத்து பொதுமக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அப்போது அவரிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அழித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி உதவி ஆணையர் சேகர்,மாநகராட்சி நகர்நல அலுவலர் ஸ்டாலின் பாக்கியராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி 19 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சோமசுந்தரி, திமுக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், அண்ணா நகர் பகுதி தொழிலாளர் அணி ஹரி ராம்,19 வது வார்டு வட்ட செயலாளர் பத்மாவதி, வட்ட பிரதிநிதி சுடலை, அமிர்தலிங்கம், மேகநாதன், ஜெபஸ்டியான்,வட்டத் துணைச் செயலாளர் மாரிமுத்து,பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா,மாநகர தொண்டர் அணி அமைப்பாளர் முருக இசக்கி,துணை அமைப்பாளர் மணி, 19 வது வார்டு இளைஞர் அணி தேவா, ராம்குமார்,அர்ஜுன் அமைச்சரின் நேர்முக உதவியாளர் கல்யாண சுந்தரம் உதவியாளர்கள் அல்பர்ட் ,செந்தில்,உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.