தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டறிந்த - அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் உறுதி!.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை மனுக்களை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகளிலும் மக்கள் குறைகளை கேட்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் குறைதீர்க்கும் முகாம்களை நடத்தி வருகிறார் அந்த வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 வது வார்டு பகுதியான பொன்னகரம் மெயின் எபனேசர் பள்ளி அருகில் வைத்து பொதுமக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை நேரில் சென்று கேட்டறிந்தார்.
அப்போது அவரிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அழித்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் வாய்க்கால்களை நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக கழிவு நீர் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்யவும் உத்தரவிட்டார்.
பொதுமக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் ராஜசேகர்,துணை மேயர் ஜெனிட்டா, கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மகேஸ்வரி வட்டச் செயலாளர் மனோ மரியதாசன், அவைத்தலைவர் சுப்பையா, வட்ட துணை செயலாளர்கள் சுரேஷ், லிங்க ராஜ், ப்ரீத்தா லட்சுமி, பொருளாளர் பரமசிவம், வட்டப் பிரதிநிதிகள் நல்லதம்பி, ஆதிநாராயணன், தமிழரசன், ஜோசப்,கருப்பசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.