தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டறிந்த - அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் உறுதி!.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை மனுக்களை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகளிலும் மக்கள் குறைகளை கேட்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் குறைதீர்க்கும் முகாம்களை நடத்தி வருகிறார் அந்த வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வது வார்டு பகுதியான சிவன் கோயில் தெரு, கீழ ரங்கநாதபுரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, பங்களா தெரு , இரண்டாவது ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை நேரில் சென்று கேட்டறிந்தார்.
அப்போது அவரிடம், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மேலும் இந்த பகுதிகளில் நடைபெற்று வரும் கழிவு நீர் கால்வாய் பணிகளையும் இரண்டாவது ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட்ட வரும் கழிவு நீர் கால்வாய் பணிகளையும் பார்வையிட்டு இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
மேலும் சில பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் பொதுமக்களின்
கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் உறுதியளித்தார்
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன் 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் கீதா செல்வ மாரியப்பன்,மாவட்ட பிரதிநிதி சக்திவேல்,மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர் இளைஞரணி ராஜா சுரேஷ்குமார், சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.