தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் பிரசாந்த் வழங்கினார்.
தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நடிகர் பிரசாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஏஆர்எஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகர் பிரசாந்த் கலந்து கொண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரம் பேருக்கு அரிசி, உடைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது பெண்கள் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டவுடன் பெண்களிடம் இருந்து நடிகர் பிரசாந்த் செல்போனை வாங்கி சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும்போது "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அந்த பாக்கியத்தை அளித்திருக்கிறார்.
இதேபோன்று எல்லாரும் உதவி செய்வார்கள். இந்த மழை வெள்ளத்தில் தமிழக அரசு மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை கூட மறந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். நமது நாடு மிகப்பெரிய நாடு. அடுத்த பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக குளம் போன்ற நீர்நிலைகளை தூர்வார வேண்டும். மேலும் ஒவ்வொரு பேரிடர் காலத்தில் நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம் இனிமேல் இதே போல் நடக்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் தூத்துக்குடி ஏஆா் எஸ் மஹாலில் வைத்து மாவட்ட தலைவா் பிரதிப் தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவா் சீனிபிரசாந்த் முன்னிலையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நடிகா் பிரசாந்த் அவா்கள் வெள்ள நிவாணர பொருட்கள் வழங்கினா் தொடா்ந்து மதிய உணவு பாா்சலாகவும் வழங்கினாா்கள் முன்னதாக விமானம் மூலம் வந்து தனியாா் விடுதியில் தங்கி ரசிகா்களை சந்தித்தாா் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி அமலதாசன் செய்திருந்தாா்.