பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாக தகவல் - சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாக தகவல் - சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி2 வது வார்டு ஓம்சாந்திநகர் கே.டி சி நகர் காமராஜர்நகர் 4T ஹவுசிங் போர்டு வெங்கடேஸ்வரா டீ ஸ்டால் எதிர்புறம் மற்றும் 3வது வார்டு ரஹ்மத்நகர் 1, 2, 3, 4, ஆகிய பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கழிவு நீர் வெளியேற்றும் பகுதியை விரைவில் சரி செய்ய வலியுறுத்தினார். 

அதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தி நகர் மேற்கு, ராம்நகர் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணியினையும் பார்வையிட்டார். 

இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி பொறியாளர் வான்மதி கவுன்சிலர் ரெங்கசாமி மாநகராட்சி பணியாளர் மூர்த்தி ராஜேஷ்குமார் வட்டச் செயலாளர்கள் தேவேந்திரன் கார்த்திக் பகுதி பொருளாளர் துரைராஜ் அவை தலைவர் ராஜசேகர் இளைஞரணி வேல்முருகன் கமாலுதீன் பெளசியா அபுதாதீர் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.