ரூ.50,000 பெறலாம் ஆதார் அட்டை மட்டும் போதும் – யாருக்கு எல்லாம் கிடைக்கும்?

ரூ.50,000 பெறலாம் ஆதார் அட்டை மட்டும் போதும் – யாருக்கு எல்லாம் கிடைக்கும்?

மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 50 ஆயிரம் கடன் தொகை பெறுவதற்கான விவரங்களும் யாரெல்லாம் இத்திட்டத்தில் பயனடைய முடியும் என்பது குறித்தான விபரங்களை அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு:

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கடனுதவி திட்டங்களை மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறது. அந்த வகையில் கொரோனா காலத்தில் சிறு வணிகர்களுக்கு பல்வேறு வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தந்தது. இந்நிலையில் தற்போது பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் மத்திய அரசிடம் இருந்து கடன் உதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும் கடன் தொகைக்கான மானியமும் மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பலனடைவதற்கு சிறு வணிகர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் துரித உணவு விற்பனை நிலையங்களை நடத்துபவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.

மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் புதிய வேலை – பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!  

முதலில் ரூபாய் 10 ஆயிரத்திற்கு மட்டுமே கடன் தொகை வழங்கப்படும். இதனை முறையாக செலுத்தும் பட்சத்தில் இரண்டாவது தவணையாக ரூபாய் 20,000 வழங்கப்படும். இவற்றை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினால் ரூபாய் 50 ஆயிரத்திற்கான கடனுதவி கிடைக்கும். இந்த கடன் உதவியை பெறுவதற்கு வணிகர்கள் தங்களின் ஆதார் அட்டை மட்டும் வைத்திருந்தால் போதுமானதாகும். நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் வாயிலாகவும் ஸ்வநிதி யோஜனா திட்டத்திற்கான விண்ணப்பத்தை வணிகர்கள் பெற்றுக் கொள்ளலாம்