ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெளிநாட்டு சதி நடந்துள்ளது ஆளுநர் ஆர் என் ரவி கூறிய கருத்து 100% உண்மை-துளசி டிரஸ்ட் தனலட்சுமி பேச்சு.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெளிநாட்டு சதி நடந்துள்ளது ஆளுநர் ஆர் என் ரவி கூறிய கருத்து 100% உண்மை-துளசி டிரஸ்ட் தனலட்சுமி பேச்சு.

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பினர், மீனவ  சமுதாய சங்கத்தினர் மற்றும் துளசி அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர் கூறுகையில், 

இது குறித்து துளசி அறக்கட்டளை தனலட்சுமி கூறுகையில், 2009 ல் இருந்து துளசி அறக்கட்டளையை நடத்திக் கொண்டிருக்கிறேன்.. 2018 இல் இருந்து இப்போது வரை நாங்கள் சொல்ல கூடியதை தான் நேற்று ஆளுநர் கூறியுருக்கிறார். வெளிநாட்டிலிருந்து நிறைய நிதி வந்து இந்த ஸ்டெர்லைட் போராட்டம் அந்த பணத்தை பயன்படுத்திதான் தூத்துக்குடியை சேர்ந்த 13 அப்பாவி மக்கள் இறந்தார்கள்.  என்பதனை ஆதாரப்பூர்வமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

25.4 2003 அன்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம் பி நாராயணன் பாய் என்பவர் உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டது என்னவென்றால் அதர் என்ஜிஒவுக்கு  பணம் வந்ததுக்காக தான் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்து மக்கள் கொல்லப்பட்டார்களா? என்று அமைச்சரிடம் கேட்டதுக்கிணங்க அவர் கூறுகையில், 3.30 கோடிக்கு நிதி வந்துள்ளது. இதில் 2 கோடிக்கு செலவு பண்ணியதாக கணக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த கணக்கை தான் கேட்டுருக்கின்றோம். ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பயன்படுத்தினார்கள் என்று தெரிந்ததால் அந்த என்ஜிஓ  மேல் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். இதை நாங்கள் வரவேற்கிறோம்..

மேலும், தமிழக ஆளுநர் நேற்று கூறுகையில், 40 சதவீதம் காப்பர் தூத்துக்குடியில் உற்பத்தியாகி உள்ளது. அதனை வெளிநாட்டு சதியாளர் ஏற்றுமதி பண்ணிக் கொண்டிருந்த நிறுவனம் இந்தியாவிற்கு இறக்குமதி பண்ணக்கூடிய நிலைமைக்கு வந்துள்ளது. வீராங்கனை என்ற ஒரு அமைப்பு பாத்திமா பாபு மூலமாக பணம் வந்துள்ளது.

மார்ச் மாதம் வியாபாரிகள், கடையடைப்பு, போராட்டம் நடந்து இருக்கின்றது. அதுபோக, தூத்துக்குடி மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் என்பது ஜல்லிக்கட்டு, அதில் வெளிநாட்டில் யாரும் கலந்து கொண்டுள்ளார்களா? வெளி மாநிலம் கூட கலந்துக்கவில்லை ஆனால் ஸ்டெர்லைட்டில் வந்து ஒரு பெரிய ஒரு மாநாடு கூட்டமே நடந்தது. தூத்துக்குடி மக்களை பிளவுப்படுத்தி அப்பாவி பொதுமக்களை 13 பேரை இழந்து கொண்டு நிற்கின்றோம். என கூறினார்.

இந்த செய்தியாளரை சந்திப்பின்போது பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.