அதிமுக புதிய டிஜிட்டல் உறுப்பினர் அட்டை - தூத்துக்குடி மேற்கு பகுதியில் நிர்வாகிகள் முருகன் திருச்சிற்றம்பலம் மந்திரமூர்த்தி ஆகியோர் வீடு வீடாக சென்று உறுப்பினர்களுக்கு வழங்கினர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு பகுதிக்கு உட்பட்ட 18 வது வார்டு அதிமுக உறுப்பினர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய டிஜிட்டல் வடிவிலான உறுப்பினர் அட்டை வழங்கும் பணி நடைபெற்றது.
இதில் பகுதி கழக செயலாளர் முருகன் தலைமையில் பகுதி குழு பொறுப்பாளர்கள் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் திருச்சிற்றம்பலம் தகவல்தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் மந்திரமூர்த்தி ஆகியோர் வ புதிய டிஜிட்டல் உறுப்பினர் அட்டை வீடு வீடாக சென்று வழங்கினர் .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சரவணபெருமாள், போக்குவரத்துபிரிவு மண்டல இணை செயலாளர் KTC லெட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் முருகன் சேவியர்ராஜ் இசக்கிராஜா திலகர் தளவாய் ராஜா பிரகாஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.