கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்எல்ஏ கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு!
திருநெல்வேலியில் நடக்கும் அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு சாலை மார்க்கமாக வந்த முன்னாள் தமிழக முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் சட்டமன்ற பொருளாளர் முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தலைமையில் எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் கலந்து கொண்டு கோவில்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர்கள் சிவசங்கர பாண்டியன்,கார்டன் பிரபு, சின்னத்துரை, கன்னியப்பன், கருப்பசாமி,சொக்கன்,மோகன், எட்டயபுரம் மகளிர் அணி நிர்வாகிகள் செல்வி, சாந்தி, ரத்தினம் பூங்கொத்து அளித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் மேலும் நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.