அதிமுக பொதுக்குழு செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுக்குழு செல்லும் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டம்  சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் முன்பு அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்

 அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவகத்திலுள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு தொண்டர்கள் பால்அபிஷேகம் செய்து வழிபட்டு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்தநிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா அணி துணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட இணை செயலாளர் சந்தனம், துணை செயலாளர் செரினா பாக்கியராஜ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், இளைஞரணி செயலாளரும் கவுன்சிலருமான வீரபாகு, தென்மண்டல தகவல் தொழிற்நுட்ப அணி இணை செயலாளரும் கவுன்சிலருமான வக்கீல் மந்திரமூர்த்தி, பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், நட்டார்முத்து, பகுதி துணை செயலாளர் கணேசன், பகுதி இளைஞரணி செயலாளரும், வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம், ஜெ.பேரவை இணை செயலாளர் டைகர் சிவா, முன்னாள் கவுன்சிலர்கள் டேவிட் ஏசுவடியான், சந்திரா, வட்ட செயலாளர்கள் நவ்ஷாத், அருண், மனுவேல் ராஜ், முன்னாள் வட்டச் செயலாளர்கள் திருமணி, விஜயன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளை விநாயகம், வக்கீல் சரவணபெருமாள், ஜோதிடர் ரமேஸ் கிருஷ்ணன், மகளிரணி ஸ்மைலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார்  வாழ்க என   கோஷங்களை எழுப்பினர்