ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் அரசு சார்பில் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் ஒட்டப்பிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளாக வேட்டி சேலை ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.