தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கொச்சை படுத்தும் விதமாக சில சமூக விரோதிகள் நடு ரோட்டில் ஆட்டை வெட்டிய வீடியோ வைரல் - மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கண்டனம்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோயமுத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார் இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கொச்சை படுத்தும் விதமாக சில சமூக விரோதிகள் நடு ரோட்டில் ஆட்டை கொடூரமாக வெட்டி தலையை தனியாக எடுத்து அண்ணாமலையின் படத்தில் இரத்தத்தை தெளிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது இந்த செயல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் .
எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளனர்.