தூத்துக்குடியில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் அரசு ஊழியர் மற்றும் பொது சேவை வீட்டுவசதி சங்கம் இஇ31 அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாசிலாமணிபுரம் 3வது தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட முதன்மை அரசு குற்றவியல் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமை வகித்தார். கூட்டுறவு சார்பதிவாளர் / செயலாட்சியர் சிவராமன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் மகேஸ்வரன் சிங் மற்றும் வீட்டுவசதி சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.