தூத்துக்குடியில் புதிய கட்டிடங்களுக்கு கலைஞரின் பெயரை வைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

தூத்துக்குடியில் புதிய கட்டிடங்களுக்கு கலைஞரின் பெயரை வைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

தூத்துக்குடி மாநகராட்சியின் அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுமார் 66 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை அமைக்கப்படும் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் சிறப்பு தீர்மானமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட பல்நோக்கு வாகனம் இருக்கும் இடம் மற்றும் பேருந்து பணிமனை ஆகியவற்றிற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரை வைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

இந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ்,கலைச்செல்வி, அன்னலட்சுமி, ரெங்கசாமி சரவணகுமார் ராமகிருஷ்ணன், ராஜேந்திரன்,முத்துவேல், விஜயகுமார், கனகராஜ், கந்தசாமி, ராஜதுரை, சுயம்புலிங்கம், பச்சி ராஜ், இசக்கிராஜா, பொன்னப்பன்,அதிஷ்டமணி, சுப்புலட்சுமி, வைதேகி, உட்பட பல்வேறு மாமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக உலக புகையிலை ஒழிப்பு முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.