தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் வரம் தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் - மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு.

தூத்துக்குடி மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் வரம் தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் - மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு.

தூத்துக்குடி மாநகராட்சி 30 வார்டுகளில் 100 சதவீதம் பணிகள் நிறைவுற்றுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஆணையாளர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று 100 சதவீதம் வெற்றி கண்டது, இதற்கு காரணமான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் சிறப்பாக செயலாற்றி 2வது முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்ற குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பது, தேர்தலுக்குப் பின் முதல்முறையாக மாநகராட்சி கூட்டம் இன்று கூடியுள்ளது, மாநகராட்சியில் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார் 

தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலையோர வியாபாரிகள் 7ஆயிரம் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்பட உள்ளது. மேலும், இட நெருக்கடியில் உள்ள நூலகங்களுக்கு மாநகராட்சி இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி 30 வார்டுகளில் 100 சதவீதம் பணிகள் நிறைவுற்றுள்ளது. சுற்றுச் சூழலை மேம்படுத்தும் வகையில் 25ஆயிரம் மரங்கள் நடப்பட உள்ளது என்று தெரிவித்தார். 

மேலும் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என நான்கு மண்டலங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த மண்டலங்களில் வாரம் தோறும் புதன்கிழமை ஒரு மண்டல பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொது மக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் மற்றும் வடிகால் நிதி திட்டத்தின் ஈடுபாடு சார்ந்த நிர்வாக பணிகளுக்காக புதிய நிர்வாக அனுமதி அளித்தல், மாநகராட்சி பகுதிகளில் வரைபடங்களுக்கு மாறாக கட்டப்பட்டு வரும் அனுமதி அற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வார்டுகளில் ஏற்பட்டு வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் நியமிக்கப்பட்ட 5 நகர அமைப்பு தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிக்காலத்தை நீடித்தல், 

மாநகராட்சி பூங்கா மற்றும் பள்ளிகளை சிறப்பாக பராமரித்தல்,மாநகராட்சி வணிகவளாகங்கள் வருவாயை பெருக நடவடிக்கை மேற்கொள்ளுதல், தருவை ரோடு திரேஸ்புரம் கணேஷ் நகர் மற்றும் பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்தல், மாநகரம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை அதிக அளவில் வளர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.