சங்கரலிங்கா புரம் கிராமத்தில் தீண்டாமை சுவற் - அகற்றக் கோரி விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரலிங்காபுரத்தில் உள்ள தீண்டாமை சுவற்றை அகற்றக் கோரி தூத்துக்குடி விசிக சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அமைந்துள்ள வளாகத்தில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா சங்கரலிங்காபுரம் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சார்ந்த மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர் அங்கு ஆதிக்க சாதியினரின் வன்கொடுமை பெரும் அளவு உள்ளது சங்கரலிங்காபுரத்து கிராமத்து மக்கள் ஆதிக்க சாதியினரின் அதிகமாக குடியேற்ந்துள்ள பகுதியின் வழியாக சங்கரலிங்காபுரத்து மக்கள் இந்த பாதையை பயன்படுத்த கூடாது என்றும், இந்த பாதையின் வழியாக அவர்கள் செல்லவே கூடாது என்றும் ஆதிக்க சாதியினரால் தீண்டாமை சுவர் ஒன்று எழுப்பட்டு உள்ளது. இந்த சுவற்றை அகற்றக் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, மாறாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை நிர்வாகம் ஆதிக்க சாதியினருக்கு சாதகமாக செயல்பட்டு கொண்டு இந்த தீண்டாமை சுவற்றை அகற்றுவதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தீண்டாமை சுவற்றை அகற்றக் கோரி சங்கரலிங்காபுரத்து மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்க் கொள்ளாமல் எங்களோடு எந்த பேச்சுவார்த்தையும் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்து நிலையில்.
இன்று நாட்டின் 76 வது குடியரசு தினத்தன்று சுதந்திர இந்தியாவின் அவமானம் சின்னமான சங்கரலிங்காபுரம் கிராமத்து மக்கள் தீண்டாமை சுவற்றை அகற்றிட கோரி தூத்துக்குடி மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதிதிராவிட மக்களின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு இருந்து தேசிய கொடி ஏந்தியவாறு பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால் காவல்துறை எங்கள் பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில் தெற்கு காவல் நிலையம் எதிரேயுள்ள அம்பேத்கர் சிலை முன்பு தூத்துக்குடி மாவட்ட விசிக ஆதிதிராவிட மக்களின் சார்பில் மத்திய, மாநில அரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் விசிக மண்டல தலைவர்கள் விசிக ஆதிதிராவிடர் மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.