வடக்கு காரசேரி பகுதிக்கு புதிய மின்மாற்றி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெய்வச்செயல்புரம் அருகே வடக்கு காரசேரி கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து சுமார் 40 மின் நுகர்வோர் பயன் பெறும் வகையில் 4.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்து வடக்கு காரசேரி கிராமத்தில் அங்குள்ள நியாயவிலைக் கடையில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட உள்ள நியாய விலைக்கடை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டார். தொடர்ந்து காசிலிங்கபுரம் அங்கன்வாடி மையத்தினையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து உதவி பொறியாளர் ராஜேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார் அரவிந்தன் கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்காந்தி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் கணேசன் கிராம நிர்வாக அலுவலர் சொர்ணலட்சுமி கிளைச் செயலாளர் ராஜாமணி மற்றும் மின்வாரிய அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.