தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைக்குளம் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைக்குளம் புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை ஆலயத்தின் முன்பிருந்து முளைப்பாரி ஊா்வலம் துவங்கியது.
இந்நிகழ்வில் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டு கோலாட்டம் அடித்து விளையாடியது அனைவரையும் கவர்ந்தது.மேலும் கோவில் முன்பிருந்து துவங்கி கொடிமரம் வரை சென்ற முளைப்பாரி ஊர்வலம் முன்பு கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோலாட்டப் பயிற்சியாளா் அந்தோணி பிரான்ஸிஸ் நம்மிடம் கூறும் போது தமிழக பாரம்பாிய மிக்க இந்த கோலாட்டம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக இந்தக் கலையை தொடா்ந்து நடத்தி வருகிறோம் கடந்த ஆண்டு 56 பேரும் இந்த ஆண்டு 120 பேரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா் என்றாா்.