வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் - எம் சி.சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமையில் அரசு நடைபெற்றது.
பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் , அடிப்படை தேவைகளான குடிநீர் மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும் எனவும் தெருவிளக்குகள் சரியான முறையில் எரிய வேண்டும் மற்றும் தெருவிளக்குகள் பழுதானால் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்..
இந்த ஆலோசனை கூட்டத்தில் யூனியன் ஆணையாளர் சசிகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன்,குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமசாமி, உதவி செயற்பொறியாளர் குமார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமசாமி,உதவி செயற்பொறியாளர் குமார், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து, வட்டார சுகாதார ஆய்வாளர் காளிமுத்து, மற்றும் துறை சார்ந்த பொறியாளர்கள் அனைத்து கிராம ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.