எட்டயபுரத்தில் அதிமுகவின் செயல் வீரர், வீராங்கனைகள் கூட்டம் - நகர செயலாளர் ராஜகுமார் ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

எட்டயபுரத்தில் அதிமுகவின் செயல் வீரர், வீராங்கனைகள் கூட்டம் - நகர செயலாளர் ராஜகுமார் ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

அதிமுகவின் கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைப்படி, எட்டயபுரத்தில் அதிமுகவின் செயல் வீரர், வீராங்கனைகள் கூட்டம் தனியார் திருமண மஹாலில் வைத்து கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் , எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், என்.கே பெருமாள், மோகன், ஒன்றிய அவைத் தலைவர் தர்மராஜ் சாமி, பேரூர் அவைத் தலைவர் கணபதி, ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக கிளை செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.