மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவைப்பட்டி ஆர் சி பள்ளி வளாகத்தில் வைத்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.
அவர் பேசுகையில் ; திமுக ஆட்சி வந்த பிறகு முதலமைச்சர் உத்தரவுபடி முறையாக கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களுடைய கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி அரசு கவனத்திற்கு எடுத்து சென்று சில பணிகளை எம்பி,அமைச்சர் ,எம்எல்ஏ, ஆட்சியர் என பலருக்கும் கொண்டு சென்று மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி மக்களின் நலன் கருதி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு இந்த ஊராட்சி எந்த நிலையில் இருந்தது தற்போது மக்கள் தொகை மற்றும் கிராமங்கள் புதிய வளர்ச்சி அதிக அளவில் உள்ளது, இதையெல்லாம் கருத்தில் கொண்டு அடிப்படை பணிகள் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளதை அனைவரும் அறிவீர்கள் தொடர்ந்து இந்த பகுதி முழுமையான வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா பணிகளும் நல்ல முறையில் நடைபெறும் என்று பேசினார்.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரமான தண்ணீர் அனைவருக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வீட்டுக்கு வரும் குடிநீர் இணைப்பு வழங்கக்கூடிய ஜல் ஜீவன் திட்டம் விரைவில் இந்த ஊராட்சியில் செயல்படுத்துவது எனவும் மேலும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் திருநங்கைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து அரசிடம் அனுமதி கேட்பது எனவும் மற்றும் ஊராட்சியில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் மின்வாரிய அலுவலகர்கள் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, தங்கமாரிமுத்து, ஜேசுராஜா, பாலம்மாள், ஸ்டாலின், மற்றும் கெளதம் மகளிர் சுய உதவி குழு பெண்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.