அதானி பவுண்டேசன் தருவைக்குளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் சார்பில் கபாடி போட்டி நடைபெற்றது.

அதானி பவுண்டேசன் தருவைக்குளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் சார்பில் கபாடி போட்டி நடைபெற்றது.

அதானி பவுண்டேசன் சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக தருவைக்குளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் சாா்பில் கபாடி போட்டி நடைபெற்றது .

ரஜினிகாந்த் மன்ற ஆலோசகா் அந்தோணிபிச்சையா தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்ற அமைப்பாளா் லாரன்ஸ் மற்றும் தருவைக்குளம் முத்து ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளா் லெனின் ஆகியோா் போட்டியினை துவக்கிவைத்தனா். 

இந்த போட்டிகள் அனைத்தும் தருவைக்குளம் அன்னை வேளாங்கன்னி மைதானத்தில் 26.12.2024 வியாழக்கிழமை அன்று காலை முதல் இரவு வரை நடைபெற்றது.

 இப்போட்டியில் தருவைக்குளம் கபாடி அணியினா் முதல் பரிசை வென்றார் முதல் பரிசாக ரூ15 000 மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.

போட்டியில் இரண்டாம் பரிசாக ரூ 10.000 ஆயிரம் மூன்றாம் பரிசாக ரூ 5000 நான்காம் பரிசாக ரூ 5.000 மற்றும் சுழற் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

ஐந்து ஆறு ஏழ எட்டாம் இடத்தை பிடித்த அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ 3000 ஆயிரம் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து கபாடி போட்டி அணிகள் கலந்து கொண்டன.

இந்தப் போட்டிகளை தருவைக்குளம் கபாடிக்குழுவும் வெள்ளப்பட்டி கபாடிக்குழுவும் இணைந்து செய்திருந்தனர்.