தூத்துக்குடியில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் உண்ணாவிரத போராட்டம்.

தூத்துக்குடியில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் உண்ணாவிரத போராட்டம்.

தூத்துக்குடியில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்து நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பு.

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும் தமிழக ஆளுநரையும் கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி நிர்வாகிகள் உறுப்பினர் என திரளாக கலந்து கொண்டனர்.