எட்டயபுரத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கடம்பூர் ராஜு தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது .

எட்டயபுரத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கடம்பூர் ராஜு தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது .

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எட்டயபுரத்தில் நேற்று மாலையில் அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் விடியா தி.மு.க அரசு பதவியேற்ற மூன்றாண்டுகளில் தமிழகம் போதைப்பொருட்களின் கேந்திரமாக மாறி இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடமும், இளைஞர்களிடமும் ஏற்படுத்தும் வகையிலும் தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்திட எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு மாலையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு எழுப்பியும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாட்டினை: எட்டயபுரம் நகர கழக செயலாளர் ராஜகுமார் சிறப்பாக செய்திருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் சேர்மன் தாமோதரன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தனபதி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், எட்டயபுரம் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் சின்னத்துரை, செல்வி, சாந்தி, கார்ட்டன் பிரபு, மூர்த்தி, கருப்பசாமி, சிவசங்கர பாண்டியன், சொக்கன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.