எட்டயபுரத்தில் திமுக அரசை கண்டித்து எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எட்டயபுரத்தில் திமுக அரசை கண்டித்து எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி ஆணைக்கிணங்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ MLA, ஆலோசனையின்படி எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்தும் சொத்துவரி உயர்வினை திரும்ப பெற வலியுறுத்தியும் எட்டயபுரம் அதிமுக நகரக் செயலாளர் ராஜகுமார் தலைமையில் மனித சங்கிலிஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் சொத்து வரி உயர்வு திரும்ப பெற வலியுறுத்தியும் போதைப்பொருள் பழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி வார்டு செயலாளர்கள் கார்ட்டன் பிரபு , சிவசங்கர பாண்டியன், மனோகரன் அவைத்தலைவர் கணபதி, நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜெயக்குமார், துணை செயலாளர் சிவ, சிவ மாரியம்மன், மோகன், முனியசாமி, மாவட்ட நிர்வாகிகள் வேலுச்சாமி, ஜஸ் முனியசாமி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.