தூத்துக்குடியில் டிஜிட்டல் வடிவிலான அதிமுக புதிய உறுப்பினர் அட்டை - அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் டிஜிட்டல் வடிவிலான அதிமுக புதிய உறுப்பினர் அட்டை - அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் உத்தரவின்படியும் டிஜிட்டல் வடிவிலான அதிமுக புதிய உறுப்பினர் அட்டையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி மேற்கு பகுதியில் பகுதி செயலாளர் முருகன் தலைமையிலும் கமிட்டி பொறுப்பாளரான மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் வட்ட கழக பிரநிதி உதயகுமார் முன்னிலையில்

வட்டக் கழகச் செயலாளர் மனுவேல்ராஜ் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்று டிஜிட்டல் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்ட கழகச் செயலாளர் மணி கணேஷ் மற்றும் அரசியல் மூத்த நிர்வாகி ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.