மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் இலவச பொது மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் HNUP பள்ளியில் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் வருகின்ற நவ் : 07 தேதி கொண்டாடவிருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் இலவச பொது மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் புதியம்புத்தூர் HNUP பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமை ஓட்டப்பிடாரம் ஒன்றிய மக்கள் நீதி மய்யம் கட்சி புதியம்புத்தூர் ரெடிமேட் பியரல் லயன்ஸ் கிளப் தூத்துக்குடி ராயல் பியரல் சிட்டி லயன்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்தினர்.
தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, உடல் பருமன் பரிசோதனை செய்து அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவகர், மாவட்டத் துணைச் செயலாளர் அக்பர் ஆகியோர் தலைமை வகித்தார்கள்,
புதியம்புத்தூர் ரெடிமேட் பியரல் லயன்ஸ் கிளப் பட்டைய தலைவர் கணேசன் முகாமை துவங்கி வைத்தார், தூத்துக்குடி ராயல் பியரல் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் செம்பு லிங்கம் முன்னிலை வகித்தார்.
முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக புலவர் கணேசன், அலெக்ஸ், அருண்குமார், கிறிஸ்துராஜ் , சேர்ம துரை, சிவக்குமார், ராஜா , சிசில் குமார் , சந்தனம், ரூபிஸ்டன், ஆகியோர் கலந்து கொண்டனர். =மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்
இந்த முகாமிற்கான ஏற்பாட்டை மக்கள் நீதி மயயம் கட்சியின் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சுடலை சிறப்பாக செய்திருந்தார் .