காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது விழாவிற்கு மகமைத் தலைவர் நடராஜன் தலைமையில் மகமைச் செயலாளர் பழரசம் விநாயகமூர்த்தி முன்னிலையில் வகித்தார் சிறப்பு விருந்தினராக மாமன்ற உறுப்பினர் 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்சிலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு பள்ளியதலைமை ஆசிரியர் ராஜதுரை சாமுவேல் வரவேற்புரை ஆற்றினார் பள்ளிச் செயலாளர் ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.
தொடர்ந்து முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்ச்செல்வி கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். அதுபோல மகமை செயலாளர் பழரசம் பா விநாயகமூர்த்தி அரசு தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார்.
விழா நிகழ்வுகளை பள்ளியின் கலைக்குழு ஆசிரியர் பார்ஜின் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் மகமை துணை செயலர் ஆனந்த கண்ணன், மகமை பொருளாளர் மதியழகன்,
பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் ராஜசேகரன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், பார்த்திபன்,சுரேஷ்,அரவிந்த், மதியழகன்,நாகராஜ்,முருகவேல், முருகேசன்,செல்வின், மற்றும் பொதுக்குழு நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.