தூத்துக்குடி மாநகராட்சி பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியில் அம்பேத்கரை அவமதித்து பேசியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் அந்தோணியார்புரம்  3 சென்ட் பகுதியில் அம்பேத்கரை அவமதித்து பேசியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியில் அம்பேத்கரை இழிவு படுத்து பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த ஆர்ப்பாட்டத்தில்

கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் அண்ணல் அம்பேத்கரை இழிவு செய்த அமித்ஷாவை கண்டிக்கின்றோம்

பதவி விலகு பதவி விலகு பாவக்காரன் அமித்ஷாவே பதவிவிலகு

பாதுகாப்போம் பாதுகாப்போம் பாதகர்களிடமிருந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்

மன்னிப்புக்கேள் மன்னிப்புக்கேள் அமித்ஷாவே மன்னிப்புக் கேள்

கொலைகார பாஜகவே உனக்கு அம்பேத்கர் என்றால் இளக்காரமா?

சர்வாதிகாரி அமித்ஷாவே உனக்கு அம்பேத்கர் என்றால் அவமானமா?

எதிர்க்கின்றோம் எதிர்கின்றோம் புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை எதிர்க்கின்றோம் எதிர்கின்றோம்

நிராகரிப்போம் நிராகரிப்போம் பாஜகவை நிராகரிப்போம்

நிராகரிப்போம் நிராகரிப்போம் பாஜகவுடன் கள்ளக்கூட்டணியில் உள்ள அதிமுகவை நிராகரிப்போம் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, சரவணகுமார்,ராஜேந்திரன், வட்ட செயலாளர்கள் மூக்கையா சுப்பையா, நவநீதன், சிங்கராஜ், மாவட்ட சூழல் அணி துணை அமைப்பாளர் T.A.மகேஸ்வரன் சிங் மாநகர ஆதிதிராவிடர் அணி நல அமைப்பாளர் பரமசிவன் மற்றும் மகளிர் அணியினர் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.