தூத்துக்குடியில் மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடூரத்தை தடுக்க தவறிய மணிப்பூர் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியினர் மற்றும் மகளிர் தொண்டர் அணியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி வி வி டி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் வைத்து நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக தலைமைக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி துவக்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு எதிராகவும் மணிப்பூரை ஆளும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணியினர், மகளிர் தொண்டர் அணியினர், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி,பேரூர், கிளைக் கழக மகளிர் அணியினர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பெரும் திரளான மகளிர் கலந்து கொண்டனர்.